Update: மேலும் சில அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மேலும் சிலர் அமைச்சர்களும், இராஜங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்பொழுது இடம்பெறுகின்றது.

நீர்ப்பாசனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக துமிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

திறன்விருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக தயசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கஜன் இராமநாதன் மீண்டும் விவசாய பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

லக்ஸ்மன் செனவிரத்ன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றம் மற்றும் விளையாட்டு துறை இராஜாங்க அமைச்சராக சிறியானி விஜயவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொகான் லால் ஹிரேறு நியமிக்கப்பட்டுள்ளார்.

வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக இந்திக பண்டார நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நிஷாந்த முத்துஹெட்டி ஹமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மீள்குடியமர்வு, புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்