ஏமன் போரினால் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமி கண்கலங்க வைத்த காட்சி..


ஏமன் போரில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறுமியின் புகைப்படம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏமனில் உள் நாட்டுப் போர் நடைபெற்ற இரண்டு வருடங்களில் சுமார் 3 லட்சத்துக்கு அதிகமான குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பசி, வன்முறை தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றனர். 5,000க்கும் மேற்பட்டோர் இந்த போர் காலங்களில் இறந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்திருக்கலாம். ஏமனின் ஒட்டுமொத்த இளம் தலைமுறையும் வறுமையிலும், வன்முறையிலும் வளர்கின்றனர் என்று ஐ.நா. வேதனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அகதிகள் முகாமில் இருந்த அமல் ஹுசேன் என்னும் 7 வயது சிறுமி பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை, எலும்பும் தோலுமாய் ஒட்டிக்கிடக்கும் சருமத்தோடு இருக்கும் அமலின் புகைப்படத்தை வெளியிட்டது. அது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஏமனில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.

இந்நிலையில் அமல் ஹுசேன் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தார். சத்துக் குறைபாட்டின் காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தாய் மரியம் அலி, ”என் இதயத்தைக் கூறுபோட்டதைப் போல் உணர்கிறேன். அமல் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். இப்போது என்னுடைய மற்ற குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது” என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்