இலங்கையில் இடம் பெற்றது துப்பாக்கி, டாங்கிகளை பயன்படுத்தாமல் இடம் பெற்ற சதிபுரட்சி – சபாநாயகர்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில்விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதை ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி என சபாநாயகர் கருஜெயசூரிய வர்ணித்துள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் விடயங்களை சதிப்புரட்சி என்றே வர்ணிக்கலாம் என ஐந்தாம் திகதி வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள சபாநாயகர் துப்பாக்கிகளையும் டாங்கிகளையும் பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதி புரட்சி என குறிப்பிடலாம் எனவும் தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.

முழு விடயங்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிறிசேன வெளிப்படைதன்மை,ஒழுக்கம் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றிற்கு மாறாக சிறிசேன நடந்துகொள்கின்றார் என தெரிவித்துள்ள கருஜெயசூரிய சிறிசேன தான் நிலைநிறுத்துவதாக சத்தியப்பிரமாணம் செய்த அரசமைப்பிற்கு முரணாக நடந்துகொள்கின்றார் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்