பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவியும் பயணித்த ஜீப் வண்டி, இன்று (07) காலை, ஹக்மன – தெனகம பிரதேசத்தில் வைத்து ட்ரெக்டர் வண்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், காயமடைந்த ட்ரெக்டர் வண்டியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், இந்த விபத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கோ அல்லது அவரது மனைவி அனோமா ராஜபக்ஷவுக்கோ எவ்வித ஆபத்தும் நேரவில்லையென ஹக்மன பொலிஸார் தெரிவித்தனர்.




No comments
Post a Comment