ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கும்..!


சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்துக்குச் சென்ற ஊடகவியலாளர் கஷோக்கி கொடூரமாக கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அதுகுறித்து துருக்கி அதிகாரிகள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி, கஷோக்கி தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே அவரது கழுத்து நெறிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவரது உடல் பாகங்கள் கிடைக்காததால், தூதரகப் பணியாளர்களால் அங்கேயே அசிட் ஊற்றி எலும்பு கூட மிஞ்சாத வகையில் அழித்திருக்கக் கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூதரகத்திற்குள் நுழைந்த உடனேயே சவுதி சதி கும்மலிடம் சிக்கிய சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டு துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் துண்டுகளாக்கப்பட்ட சடலம் அகற்றப்பட்டுள்ளதாக துருக்கி வழக்கறிஞர் இர்ஃபான் ஃபிதான் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்