
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்னவிற்கு எதிராக, ஊவா மாகாண அரச வைத்தியர் சங்கத்தினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகஜரொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
இம் மகஜரில், ஊவா மாகாணத்தின் 527 வைத்தியர்களும் கையொப்பமிட்டுள்ளனர். ஒருபெண் வைத்தியர் மட்டும் பிரசவ விடுமுறையில் இருப்பதால்,அவர் மகஜரில் கையொப்பமிடவில்லையென்று, ஊவா அரச வைத்தியர் சங்க செயலாளர் டாக்டர் பாலித்த ராஜபக்சதெரிவித்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்தசேனாரட்ன தமது கடமை காலத்தில், ஊவா அரச வைத்தியர்கள் மீது மேற்கொண்ட பலிவாங்கல்களை ஆட்சேபித்து, மேற்படி மகஜர் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments
Post a Comment