இன்றும் சிலர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் மேலும் சில விக்கெட்டுக்கள் வீழ்த்தப்படும்..?


இன்றைய தினத்திலும் அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் புதன் கிழமை புதிய அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் எனவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்பில் அரசாங்கத்தினால் வரவு செலவு திட்டத்திற்கு மாற்றாக இடைக்கால வரவு செலவு திட்டமொன்று பிரதமரால் முன்வைக்கப்படும் என அரசாங்க ஊடக பேச்சசாளர் மகிந்த சமரசிங்க குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்