குழந்தையின் டயப்பரை மாற்றாத பெற்றோர்: புழுக்கள் உருவாகி, இறந்த குழந்தை அதிர்ச்சி தகவல்..




அமெரிக்காவின் குழந்தை ஒன்று தனது தொட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.
ஸ்டெர்லிங் என்ற அந்த நான்கு மாதக் குழந்தையை பரிசோதித்தபோது அதன் டயப்பர் 9 முதல் 14 நாட்கள் வரை மாற்றப்படாமல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

டயப்பரினுள் பூச்சிகள் சென்று முட்டையிட்டதால், அதிலிருந்து புழுக்கள் உருவாகி, டயப்பர் ராஷ் என்னும் புண்கள் உருவானதால், மலத்திலுள்ள கிருமிகள் குழந்தையின் உடலுக்குள் நுழைந்ததோடு, போதுமான உணவும் இல்லாததால் குழந்தை உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

குழந்தையை கவனிக்க தவறிய தந்தை, தாயாகிய இருவரும் குழந்தைக்கு ஆபத்தை விளைவித்தது மற்றும் கொலைக் குற்றம் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்