கோடிகளுக்கு பேரம் பேசும் குரல் பதிவு வெளியாகியது கலங்கிப் போன பொதுமக்கள்..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியும் 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.



கொழும்பில் இன்று -03- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, யோசித்த ராஜபக்சவின் பிரதிநிதி உட்பட பலர் தன்னை தொடர்புக்கொண்டு பேரம் பேசியதாகவும் அது தொடர்பான தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளையும் ரங்கே பண்டார வெளியிட்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்