வி.சி.இஸ்மாயிலின் கனவு தவிடுபொடியாகியது!





அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட இவர், பதவி, பண, அதிகார ஆசைகளுக்கு சோரம் போய், இந்தத் துரோகத்தனத்தையும் நன்றிகெட்ட தனத்தையும் செய்த போதும், மஹிந்த தரப்பினரின் இறுதிநேர தலையீட்டினால் அவரது பதவியேற்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவர் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் எந்தவொரு காலகட்டத்திலும் தமக்கு ஆதரவளிக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்திலும், தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு அது பாதிப்பாக அமையக் கூடும் என்று கருதியே, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.


அத்துடன், இந்த ஆட்சி மாற்றத்திலோ அல்லது எதிர்கால அரசிலோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும், அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினதும் முழுமையான ஆதரவை எதிர்பார்த்து இருப்பதாலேயே மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வி.சி.இஸ்மாயில் எம்.பியை அரச தரப்புக்கு கொண்டு செல்வதில் பெரும்பான்மை அமைச்சர் ஒருவரும் முஸ்லிம் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்