தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் இன்றைய தினம் சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சம கால அரசியல் மாற்றங்கள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்த விளக்கத்தைக் கொடுக்குமுகமாகவுமே இந்த சந்திப்பு இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகியுள்ள இந்தச் சந்திப்பில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறானதாக அமையும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய அரசியல் கட்சிகளையும் சபா நாயகர் இன்றைய தினம் மேற்கண்ட நோக்கத்திற்காக சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




No comments
Post a Comment