பெரும்பான்மை எம்மிடம் உள்ளது : ஜனாதிபதி அதிரடி ரணில் அதிர்ச்சியில்..



நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மிடம் உள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், கடந்த புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு கூட்டத்திலேயே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

நிலையான அரசாங்கத்தை அமைக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் ஏனைய குழுக்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் முக்கியமான சந்தர்ப்பங்களில் அரசியல்குழுவை அமைத்து தீர்மானங்களை எடுப்பதற்கான, சுதந்திர கட்சியின் யாப்பில் இரண்டு திருத்தங்களை உள்ளடக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்